

போச்சம்பள்ளி சிப்காட்டில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி, ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியை நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில், வேப்பம், புங்கம், அயன், அரசன், ஆலமரம், இழுப்பை, தன்டிரை, வேங்கை, எட்டி, பாதாம் மற்றும் பூவரசு உள்ளிட்ட ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இன்றைய அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், மரம் நடுவதை மக்கள் இயக்கமாக அனைவரும் மேற்கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் ஒவ்வொருவரும் தங்களது வீடு, பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் ஒரு மரக்கன்றை நட்டு, பராமரித்து, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பர்கூர் திமுக எம்எல்ஏ மதியழகன், மாவட்ட வன அலுவலர் பிரபு, சமூக வனவியல் மற்றும் விரிவாக்க பிரிவு அலுவலர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டம்
நல்லம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையம், மேம் படுத்தப்பட்ட வட்டார மருத்துவ மனையாக தரம் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் இதுவரை இணைப்பு பெறாத குக்கிராமங்களுக்கும் புதிய இணைப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்கப் படும்.
மாவட்டத்திற்கு 6500 தடுப் பூசிகள் வந்துள்ளது. தடுப்பூசி போடும் பணி இன்று (நேற்று) முதல் நடைபெறுகிறது என்றார்.
இந்நிகழ்வில் துணை ஆட்சியர் பிரதாப், மாவட்ட வன அலுவலர் (வன சமூக காடுகள் திட்டம்) பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.