‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் :

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், உங்கள் தொகுதியில் முதல்வர் துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள் தலைமை வகித்தார்.

எம்எல்ஏக்கள் திருவாரூர் பூண்டி.கே.கலைவாணன், திருத்துறைப்பூண்டி க.மாரிமுத்து உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் பேசியது:

திருவாரூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ், இதுவரை 7,711 மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 168 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, தற்போது 116 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. மேலும், சாலை மேம்பாடு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டி வரப்பெற்றுள்ள பொதுவான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in