சேலம் மாவட்டத்துக்கு 16,500 டோஸ் தடுப்பூசி வந்தது :

சேலம் மாவட்டத்துக்கு 16,500 டோஸ் தடுப்பூசி வந்தது :
Updated on
1 min read

சேலம் மாவட்டத்துக்கு கரோனா தடுப்பூசி 16,500 டோஸ் வந்தது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மற்றும் ஆத்தூர் சுகாதார மாவட்டங்களுக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப் பட்டிருந்த தடுப்பூசி மையங்களில் நேற்று முன்தினம் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு பல மையங்களில் தடுப்பூசி போடப்படவில்லை.தடுப்பூசிஇருப்பு இருந்த ஒரு சில மையங்களில் மட்டும் நேற்று தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், சேலம் மற்றும் ஆத்தூர் சுகாதார மாவட்டங்களுக்கு நேற்று கோவிஷீல்டு 14,000 டோஸ், கோவேக்சின் 2,500 டோஸ் என மொத்தம் 16,500 டோஸ் வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in