நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட நல்லிபாளையத்தில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச்  சென்று சளி, காய்ச்சல் உள்ளதா என கணக்கெடுத்து வருகின்றனர்.
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட நல்லிபாளையத்தில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளதா என கணக்கெடுத்து வருகின்றனர்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க - வீடு வீடாக கள ஆய்வு செய்யும் பணி தொடக்கம் :

Published on

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வீடு வீடாகச் சென்று கள ஆய்வு செய்யும் பணி நேற்றுதொடங்கியுள்ளது. இது தொடர்பாக நாமக்கல் நகராட்சி ஆணையர் மா.பொன்னம்பலம் கூறியதாவது:

நாமக்கல் நகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு வீடு வீடாகச் சென்று கள ஆய்வு செய்யும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இப்பணி 10 நாட்கள் நடை பெறும். இப்பணியில் நகராட்சி பணியாளர்கள் மற்றும் தன்னார் வலர்கள் என சுமார் 450 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் காய்ச்சல், சளி உள்ளதா எனக் கேட்டு பதிவு செய்து வருகின்றனர்.

கரோனா அறிகுறி இருந்தால் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப் படுவர். லேசான காய்ச்சல், தலைவலி இருப்பவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் அளிக்கப்படுகிறது. எனவே, வீடு தேடி வரும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் சரியான விவரங்களை அளிக்க வேண்டும், என்றார்.

ஈரோட்டில் 1,200 பேர் நியமனம்

ஈரோடு மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில், கரோனா நோய் தொற்றுள்ளவர்களைக் கண்டறியும் பணிக்காக, மண்டலத் திற்கு 300 தன்னார்வலர்கள் என மொத்தம் 1200 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், 100 வீடுக்கு ஒரு பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையில் அவர் களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்குச் சென்று காய்ச்சல், சளி உள்ளதா என்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

தன்னார்வலர்களின் பணியைக் கண்காணிக்க 100 மாநகராட்சிஅலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர், என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in