விழுப்புரத்தில் 20 மருத்துவர்களுக்கு பணி ஆணை :

விழுப்புரத்தில்  20 மருத்துவர்களுக்கு பணி ஆணை  :
Updated on
1 min read

விக்கிரவாண்டி பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பாக18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று தொடங்கி வைத்து, "தற்போது வரை மாவட்டத்தில் 1.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்துள்ளது" என்றார்.

இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 20 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது ஆட்சியர் அண்ணாதுரை, விழுப்புரம் எம்பி ரவிக்குமார், எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in