Regional02
கருப்பு பூஞ்சைக்கு - கீழக்கரை முதியவர் உயிரிழப்பு :
கருப்பு பூஞ்சைக்கு கீழக்கரை முதியவர் உயிரிழந்தார்.
கரோனாவைப் போன்று கருப்பு பூஞ்சை தொற்றும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டோர், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கருப்பு பூஞ்சை தொற்று அதிகம் தாக்குகிறது. பரமக்குடியில் 56 வயது பெண் ஒருவர், திருவாடானை அருகே அரைக்கோட்டையில் 45 வயது ஆண், கீழக்கரையில் 70 வயது முதியவர், தங்கச்சிமடத்தில் ஒருவர், மண்டபத்தில் 3 பேர் என 7 பேருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை அறிகுறி காணப்பட்டுள்ளது.
இவர்கள் மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கீழக்க ரையைச் சேர்ந்த 70 வயது முதியவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார் என சுகா தாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
