கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,900 பேருக்கு கரோனா தடுப்பூசி :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,900 பேருக்கு கரோனா தடுப்பூசி :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 17 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் 2900 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று 17 இடங்களில் நடத்தப்பட்டது. அதன்படி ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், அரசு ஊழியர்கள், பேருந்து ஓட்டுநர்கள், உள்ளாட்சி, பேரூராட்சி பணியாளர்கள், செய்தித்தாள் விநியோகம் செய்பவர்கள், பால் விற்பனையாளர்கள் உள்ளிட்டவர்கள் என மொத்தம் 1065 பேர் முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இதேபோல், 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு கெலமங்கலம், பாகலூர், ஜெகதேவி, சாமல்பட்டி, ஊத்தங்கரை என 6 இடங்களிலும், 45 வயது மேற்பட்டவர்களுக்கு தளி, பாகலூர், சூளகிரி, ஜெகதேவி, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம் என 9 இடங்களிலும், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 17 இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமில் 2900 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in