மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை - பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் :

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை -  பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் :
Updated on
1 min read

மின் வாரிய பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கக் கோரியும், ஒப்பந்தத்தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூருக்கு வந்த மின் பகிர்மான கழக கூடுதல் மேலாண்மை இயக்குநர் வினீத்தை, மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர்அ.சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து அளித்த மனுவில், "முழு ஊரடங்கு காலத்தில் மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கரோனா தொற்றால் இதுவரை 40-க்கும் மேற்பட்ட மின் வாரிய ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். மின் வாரியத்தில் பணிபுரியும்ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படாததால், தொற்றால்பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழக்கும் பணியாளர்களுக்கு எந்தவித சலுகையும் கிடைப்பதில்லை. எனவே, மின்வாரியபணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அதற்குரிய சலுகை களை வழங்க வேண்டும்.

மின் வாரியத்தில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, கடந்த பல ஆண்டுகளாக கம்பங்கள் நடுதல், மின் மாற்றிஅமைத்தல், மின் தடை சரிசெய்தல்உள்ளிட்ட பணிகளை, பிரிவு அலுவலகங்களில் ஒப்பந்தத்தொழிலாளர்கள்தான் செய்து வருகின்றனர்.

தாராபுரம் நகர மின்வாரிய அலுவலகத்தில் பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளி காளிமுத்து குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மின் பகிர்மான கழக கூடுதல் மேலாண்மை இயக்குநர், ‘இதுதொட‌ர்பாக அரசுட‌ன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in