ஆ.ராசா மனைவி உடலுக்கு உதயநிதி, அமைச்சர்கள் அஞ்சலி :

ஆ.ராசா மனைவி உடலுக்கு உதயநிதி, அமைச்சர்கள் அஞ்சலி :
Updated on
1 min read

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா எம்.பி.யின் மனைவி அ.மு.பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி.யின் மனைவி மு.அ.பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்து வதற்காக நேற்று அதிகாலை முதல் பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ., பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாநில அமைச் சர்கள் க.பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராமச்சந்தி ரன், எஸ்.ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வெ.கணேசன், எஸ்.எஸ்.சிவசங்கர், பி.மூர்த்தி மற்றும் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வெங்கடபிரியா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், துணை கண்காணிப்பாளர் சரவணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், ம.பிரபாகரன், கா.சொ.க. கண்ணன், கு.சின்னப்பா, இனிகோ இருதயராஜ், தியாகராஜன், சந்திரசேகர், நீலமேகம், நிவேதா முருகன், கார்த்திகேயன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பரமேஸ்வரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், அவரது உடல் வேலூரில் உள்ள தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in