

தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் நல சங்கம் மாநில அமைப்பாளர் தெ. ஆறுமுகம், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
கரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களை கட்டாயப்படுத்த கூடாது. அவர்களது விருப்பத்தின் பேரிலேயே ஈடுபடுத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதுபோல், சத்துணவு மற்றும் அங்கன்வாடி திட்டத்தில் பணிசெய்யும் ஊழியர்களையும் கட்டாயப்படுத்தி ஈடுபட செய்ய வேண்டாம் எனவே, விருப்பம் இல்லாத ஊழியர்களை கட்டாயப்படுத்த கூடாது.