அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் - கரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு :

அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  -  கரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு :
Updated on
1 min read

திருப்பூர் வடக்கு வட்டத்துக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியார்பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சைமையத்தை, செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.செல்வராஜ் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். 200 தனித்தனி படுக்கைகள், 36 ஆக்சிஜன் படுக்கைகள், 2 மினி அவசர சிகிச்சை பிரிவு படுக்கை வசதிகள், மருத்துவர்கள், செவிலியர்களின் கண்காணிப்பு, குழந்தைகள் பராமரிப்பகம், இலவச உணவு மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு, பொதுமக்கள் அனைவரும் மிகுந்த பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து நிப்ட்-டீ கல்லூரி விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தையும், முதலிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமையும் பார்வையிட்டனர். வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, கோட்டாட்சியர் ஜெகநாதன், மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in