

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் சுமார் 18 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் 18 நபர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பிற்கு உண்டான சிகிச்சை முன்னெச்சரிக்கையாக அளிக்கப்படுகிறது. தற்போது வரை அந்த 18 நபர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படவில்லை. அவர்களுக்கு தேவையான பரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது, என்றார்.