கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட - தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் :

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட -  தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள்  இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் :
Updated on
1 min read

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித் துள்ளார்.

இததொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்களுடன் ஒருகிணைந்து செயல்பட மாநில மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில குழுவிற்கு tnngocoordination@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி வழங்கப்பட்டுள்ளது.

தன்னலம் கருதா தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து கரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிட இக்குழுக்கள் பாலமாக செயல்படும். தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் http://ucc.uhcitp.in/ngoregistration என்கிற இணையதளத்தில் பதிவு செய்து, இப்பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

மேலும், கூடுதல் தகவல்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூக நல அலுவலரை அணுகியும், 04343 235717 என்ற தொலைபேசி எண்ணிலும், dswokrishnagiri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் பெற்று பயனடையலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in