விவசாய உதவி எண்கள் வெளியீடு :

விவசாய உதவி எண்கள் வெளியீடு :
Updated on
1 min read

விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் விவசாயிகளுக்கு ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால், வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சொர்ண வாரி பருவ நெல் சாகுபடிநடைபெற்று வருகிறது. ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தடையின்றி பணிகளை மேற்கொள்ளவும், தட்டுப்பாடின்றி விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் கிடைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், தேவையான விதைகள், நுண்ணூட்டக் கலவைகள், உயிர் உரங்கள் இருப்பில் வைக்கப்பட்டு வேளாண் விரிவாக்கமையங்கள் மூலம் மதியம் 12 மணிவரையில் விநியோகிக்கப்படுகின்றன. மேலும், தனியார் உரம்மற்றும் பூச்சி மருந்து விற்பனைநிலையங்கள் காலை 10 மணிவரை விற்பனை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

சொர்ண வாரி பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களான கோ 51, டிபிஎஸ் ரகங்களை பயன்படுத்தி திருந்தி நெல் தொழில்நுட்ப முறையில் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் முன் வரவேண்டும்.

மேலும், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள், இடுபொருள் தேவை மற்றும் விளை பொருட்களை சந்தைப்படுத்துவதில் ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால், வட்டார வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் வெளியிட்டப்பட்டுள்ளன. வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை சிறு காவேரிப்பாக்கம் 7708326919, உத்திரமேரூர் 7708611066, வாலாஜாபாத்9952044049, பெரும்புதூர் மற்றும் படப்பை 9840435311 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்களை சிறுகாவேரிப்பாக்கம் 7904684006, உத்திரமேரூர் மற்றும்படப்பை 9789861125, வாலாஜாபாத் மற்றும் பெரும்புதூர் 9500427366 ஆகிய எண்களிலும் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறை இணை இயக்குநர் பி.கோல்டி பிரேமாவதி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in