

கரோனாவால், பெற்றோரை இழந்த மற்றும் வறுமையில் வாடும் 20 குழந்தைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக வறுமையில் மற்றும் பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு, சமூக ஆர்வலர் குணசேகர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக் குழும உறுப்பினர் அமுதா ஆகியோர் நன்கொடை வழங்கினர். இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நலக்குழுமம் சார்பில், ஆதரவற்ற வறுமையில் வாடும் பர்கூர், வேப்பனப்பள்ளி, ஊத்தங்கரை ஒன்றியத்தைச் சேர்ந்த 20 குழந்தைகளுக்கு, ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள் மாவட்ட குழந்தைகள் நலக்குழும அலுவலகத்தில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத் தலைவர் கலைவாணி, உறுப் பினர்கள் அமுதா, அமல்ராஜ், காயத்ரி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்.