நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் :

நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் :
Updated on
1 min read

கிருஷ்ணகிரி டான்சி வளாகத்தில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அஸ்லாம் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவன், கிருஷ்ணகிரி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் பங் கேற்று 150 நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களை வழங்கினர். இதனைத் தொடர்ந்து போலீஸார், வருவாய்த்துறை, மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணி யாளர்கள் 1200 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சந்திரா, சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், கடலரசு மூர்த்தி, திருமலைசெல்வம், கராமத், வேலுமணி, ஜாமிர், ரியாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in