சூளகிரியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு அறையுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை எஸ்பி பண்டிகங்காதர் திறந்து வைத்தார்.
சூளகிரியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு அறையுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை எஸ்பி பண்டிகங்காதர் திறந்து வைத்தார்.

சூளகிரியில் சிசிடிவி கண்காணிப்பு அறையுடன் புறக்காவல் நிலையம்: எஸ்பி திறந்து வைத்தார் :

Published on

சூளகிரியில் தனியார் பங்களிப் புடன் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு அறையுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை எஸ்பி பண்டிகங்காதர் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நகரப் பகுதியில் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவைகளை கண்காணிக்கவும், சூளகிரி ரவுண்டானா பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு அறையுடன் கூடிய புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு ஏடிஎஸ்பி ராஜி, ஓசூர் டிஎஸ்பி முரளி, ஓசூர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் வரவேற்றார். தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள, சிசிடிவி கண்காணிப்பு அறையுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை எஸ்பி பண்டிகங்காதர் திறந்து வைத்தார்.

அப்போது எஸ்பி கூறியதாவது: சூளகிரி நகரில் அனைத்து வீதிகளிலும் 75 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் 25-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விபத்து மற்றும் குற்றச்சம்பவங்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு உதவிட காவல்துறை எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in