

தற்சார்பு பசுமை கிராமங்கள் அமைப்பின் தேசிய அமைப் பாளர் ஆறுபாதி கல்யாணம் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு:
கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க எக்ஸ்னோரா உள்ளிட்ட அமைப்புகள் சேர்ந்து 750 சித்த மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்துள்ளது. இவர்கள் கரோனா தொற்று ஒழிப்புப் பணியில் தன்னார் வலர்களாக பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக மாவட்டங்களில் உள்ள கரோனா மருத்துவ மையங்களில் இந்த மருத்துவர்களையும் இணைத்துக் கொண்டு அலோபதி மருத்துவத்துடன் சேர்த்து சித்த மருத்துவ சிகிச்சையையும் வழங்கலாம்.
இந்த திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த முன்வந்தால், சித்த மருத்துவர்களை ஒருங்கிணைக்க எங்கள் அமைப்பு தயாராக உள்ளது. தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்து கரோனாவை ஒழிக்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.