நெய்வேலி என்எல்சியில் அதிகரிக்கும் கரோனா பரவல் : நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

நெய்வேலி என்எல்சியில் அதிகரிக்கும் கரோனா பரவல் :  நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
Updated on
1 min read

நெய்வேலி என்எல்சியில் கரோனா பரவல் அதிகமாக இருப்பதாக கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முதல்வருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்பது:

நெய்வேலி நகரத்தில் சுமார்1.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதத்தில் மட்டும் 3,000-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். என்எல்சியில் 90 சதவீதம் தொழிலாளர்கள் பணியில்ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து இடங்களிலும் தொழிலாளர்கள் ஒன்று கூடுவதும், நெருக்கமாக பணியாற்றுவதும் கரோனா பரவலை அதிகரிக்கிறது. எனவே, தமிழக அரசு வழிகாட்டிய அடிப்படையில் என்எல்சியில் 50 சதவீதம் பணியாளர்கள் மட்டுமே பணியாற்றுவதை உறுதி செய்திட வேண்டும்.

வெளிமாநிலத் தொழிலாளர் களில் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று திரும்பி வந்தவர்களும் பணி புரிந்து வருகின்றனர். இதனால் நெய்வேலியில் கரோனா பரவல் அதிகரிப்பதற்கும், உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. இது குறித்து என்எல்சி நிர்வாகத்திடம் தொழிற்சங்கங்கள் வற்புறுத்திய பின்னரும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.என்எல்சி.நிர்வாக மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையம் மற்றும் சி.டி. ஸ்கேன் வசதி உடனடியாக அமைத்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in