

திண்டுக்கல் அருகே வெள்ளோடு கிராமம் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்ததில் அனுமதியில்லாத துப்பாக்கி ஒன்று இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் (25), சலேத் பிரபாகரன் (21) ஆகியோர் எனத் தெரியவந்தது. துப்பாக்கி மற்றும் பால்ரஸ் குண்டு 100, கருப்பு கரிமருந்து ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அம்பாத்துரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.