

பொதுமுடக்க காலத்தில் மருத்துவ உதவி உள்ளிட்ட உதவிகளுக்கு அணுகலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கட்டுப்பாட்டு அறைகளையும் அமைத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையின் விவரம்:
தமிழக அரசு கரோனா 2-ம் அலை பரவலைத் தடுக்கும் பொருட்டு முதல் ஒரு வாரத்துக்குதளர்வுகளற்ற முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது.
வீட்டுக்கே சென்று உதவி
அவர்கள் இருக்கும் பகுதிக்கு தொடர்புடைய காவல்நிலையத்தில் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் மூலம் அவர்களது வீட்டுக்கே சென்று தேவையான உதவிகள் செய்யப்படும்.
பொதுமக்கள் ஊரடங்கின்போது முகக்கவசம், தனி மனித இடைவெளியைக் கடைபிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றார்.
கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்: 044-27239200, 044-27236111.