

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நியாயவிலை கடைகளிலும் ஆக்சிஜன் அளவினை கண்டறியும் கருவிகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் தங்களுடைய ஆக்சிஜன் அளவினை அறிந்துகொள்ள ஏதுவாக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் நேற்று ஆக்சிஜன் அளவினை கண்டறியும் கருவிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வழங்கினர்.
நிவாரன உதவிகள்
அப்போது ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங், திட்ட இயக்குநர் காஞ்சனா சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி, சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் மணிமேகலை, துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.