பொய்யான தகவல் அளித்து இ-பாஸ் பெற்றவர் கைது :

பொய்யான தகவல் அளித்து    இ-பாஸ் பெற்றவர் கைது :
Updated on
1 min read

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த சரவணன்(41) நேற்று முன்தினம் மாலை தேனி அருகே காரில் சென்றார்.

இவரது காரை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது பெரியகுளம் செல்வதாகக் கூறியுள்ளார். ஆனால் திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டைக்குச் செல்ல இ-பாஸ் பெறப்பட்டிருந்தது. உறவினர் இறப்புக்காக செல்வதாக அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் பொய்யான தகவல் கொடுத்து இ-பாஸ் பெற்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இவரைக் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

அவருக்கு உதவியாக இருந்த கணினி மைய உரிமையாளர் பிரகாஷ் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in