

கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் புதுச்சேரி எல்லை பகுதியில் சீல் வைக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கடலூர் எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் வெளி மாநிலத்தவர்கள் வராத அளவுக்கு சீல் வைக்கப்பட்டது. புதுச்சேரி எல்லைக்கும் கடலூர் பகுதிக்கும் இடையே பல இடங்களில் போலீஸார் பேரிகார்டு அமைத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலையில் புதுச்சேரி பகுதியில் இருசக்கர வாகனங்களில் கடலூரை நோக்கி வந்த சிலரை போலீஸார் நிறுத்தி எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர். சிலருக்கு அபராதம் விதித்தனர். புதுச்சேரியில் இருந்து எந்த வாகனமும் கடலூர் மாவட்டத்துக்குள் நுழையாதவாறு போலீஸார் எல்லைப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.