

தேனியில் முழு ஊரடங்கு குறித்து தென்மண்டல ஐஜி டி.எஸ்.அன்பு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர் வில்லாத ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இவற்றை கண்காணிக்கவும், முறைப் படுத்தவும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தென் மண்டல ஐஜி அன்பு நேற்று தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
ஆண்டிபட்டி, க.விலக்கு, அரண்மனைபுதூர் விலக்கு, தேனி நேரு சிலை சந்திப்பு, பெரியகுளம், தேவதானப்பட்டி, காட்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு மற்றும் இதர வாகனங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண் தேஜஸ்வி, கூடுதல் காவல் கண் காணிப்பாளர் சங்கரன் உட்பட பலர் இருந்தனர்.