18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி : தூத்துக்குடி மாவட்டத்தில் தொடக்கம்

காயல்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
காயல்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.

கட்டிடத் தொழிலாளர்கள், வெளி மாநில தொழிலாளர்கள், அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனை கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள், பள்ளிகல்லூரி ஆசிரியர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கரோனா தடுப்பூசி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பெ.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

காயல்பட்டினம் ஜலாலியா மண்டபத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,எஸ்பி ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in