கரோனா தடுப்பு ஊழியர்களுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ :

கரோனா தடுப்பு ஊழியர்களுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ :

Published on

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் ஊரடங்கு காலத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு, அவர்கள் பணியாற்றும் இடங்களுக்கே சென்று சிற்றுண்டி வழங்க மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாக செயல்படும் நேசக்கரம் ஏற்பாடு செய்துள்ளது. இப்பணியை ருக்மணி பாளையம் மகப்பேறு நிலையம் பகுதியில் காவல் பணியில் இருந்த போலீஸாருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் சிறுதானியக் கஞ்சி வழங்கி மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், போலீஸாருக்கு கை உறை ஆகியவற்றையும் வழங்கினார். இந்நிகழ்வில் மன்னார்குடி நகராட்சி ஆணையர் கமலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in