

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு ரூ.200, சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 மற்றும் கூட்டம் அதிகமாகஇருந்தால் ரூ.500 என, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.நேற்றுமுன்தினம் மட்டும்முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.1,35,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் ரூ.1,23,90,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நேற்று முன்தினம்மட்டும் சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களிடம் ரூ.33,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில்இதுவரை ரூ.10.21 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிக கூட்டம் கூடியதாக இதுவரை ரூ.3,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை மொத்தம் ரூ.1,34,14,200 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.