தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டத்தில் தான் - 4 இடங்களில் கரோனா சித்த மையம் தொடங்கப்பட்டுள்ளது : கூடுதல் அரசு தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவஹர் பெருமிதம்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் அரசு தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவஹர் ஆய்வு செய்தார். அருகில், ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உள்ளிட்டோர்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் அரசு தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவஹர் ஆய்வு செய்தார். அருகில், ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உள்ளிட்டோர்.
Updated on
2 min read

தமிழகத்திலேயே திருப்பத்தூர் மாவட்டத்தில் தான் 4 இடங் களில் கரோனா சிறப்பு சித்த மருத்துவமனைகள் தொடங்கப் பட்டுள்ளதாக கூடுதல் அரசு தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவஹர் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்புப்பணிகள் மற்றும் முழு ஊரடங்கு நடைமுறைகுறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கூடுதல் அரசு தலைமை செயலாளருமான தென்காசி.எஸ்.ஜவஹர் நேற்று தலைமை வகித்துப் பேசும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 24 முதல் வரும் 31-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு விதிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம்.

பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க மாவட்டம் முழுவதும் 116 நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கரோனாவை ஒழிக்க சிறந்த வழி தடுப்பூசி போட்டுக்கொள்வது ஆகும். 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விரைவாக தடுப்பூசி போட வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் 21 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. இவற்றை விரைவாக போட வேண்டும்.

கிராமப்பகுதிகளில் கரோனா பரவலை கண்காணிக்க உள்ளாட்சி அமைப்பு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இணைந்து தினசரி ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட எல்லைகளில் சோதனைகளை பலப்படுத்த வேண்டும். இ-பதிவு உள்ள வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கரோனா முன்களப்பணியில் ஈடுபடுவோர்களை பணி செய்யவிடாமல் தடுத்தால் சம்பந்தப் பட்டவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு ஊரடங்கு காலத்தில் முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவி தேவையெனில் கட்டுப்பாட்டு உதவி எண்ணான 94862-42428 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். அதேபோல, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள், மருத்துவ உதவிகளை வட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொண்டு தங்களது தேவைகளை தெரிந்து கொள்ளலாம்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, வாணியம் பாடி சந்தைமேட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை தென்காசி.எஸ்.ஜவஹர் ஆய்வு செய்தார். பிறகு, வாணியம்பாடி அரசு தலைமை மருத்துவமனையில் 100 படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தற்காலிக கட்டமைப்பு பணிகள் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டிடத்தில் கரோனா சிகிச்சை மையத்தையும் அவர் ஆய்வு செய்தார்.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் 4-வது சித்த சிகிச்சை மையம் ஆம்பூரில் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை தென்காசி எஸ். ஜவஹர் நேரில் ஆய்வு செய்து, தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தான் 4 இடங்களில் சித்த சிகிச்சை மையம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யபாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, குடும்ப நல இணைஇயக்குநர் மணிமேகலை, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வி.விக்ரம்குமார், வேலூர் புற்று மகரிஷி மருத்துவமனையின் சித்த மருத்துவர் டி.பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in