ஊத்துக்குளி, குன்னத்தூர் மருத்துவமனைகளில் - ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வலியுறுத்தல் :

ஊத்துக்குளி, குன்னத்தூர் மருத்துவமனைகளில் -  ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க வலியுறுத்தல் :
Updated on
1 min read

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் அரசு தாலுகா மருத்துவமனை, குன்னத்தூரில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், வெள்ளிரவெளி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கரோனா தொற்று பரவலுக்கு ஏற்ப மருத்துவம் பார்க்க போதிய வசதிகள்இல்லை. ஊத்துக்குளி அரசு மருத்துவமனையிலும், குன்னத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குறைந்தபட்சம் 30 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளடக்கிய 50 கரோனா படுக்கைவசதிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். போதுமானமருத்துவர், செவிலியர், இதர பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.

கரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள, ஊத்துக்குளி தாலுகாவுக்கு 100 படுக்கைகள் வசதியுடன் கூடிய பராமரிப்பு மையம் ஏற்படுத்தவேண்டும். ஊத்துக்குளி அரசு மருத்துவமனை, குன்னத்தூர் மற்றும் வெள்ளிரவெளி ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாள்தோறும் காலை முதல் மாலை வரை கரோனா பரிசோதனை மேற்கொள்வதுடன், கூடுதலாகஇலவச ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் பேருந்துவசதிகளை ஏற்படுத்தவேண்டும். தடுப்பூசிபோடும் மையங்களை அருகாமையில் உள்ளபள்ளி வளாகங்களில் அமைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in