

கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்கள், விதிமுறைகளை மீறி பொது இடங்களுக்கு வந்தால், அது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஈரோடு ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை மேற்கொள்வதற் காகவும், தொற்று உள்ளது என உறுதி செய்யப்பட்ட நபர்கள் சிகிச்சை மேற்கொள்வதற்காகவும் தனித்தனி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது. எனவே, நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப் பட்ட நபர்கள், வீடுகளில் கழிவறை யுடன் கூடிய தனி அறையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்கள், மாவட்டம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அமைக்கப் பட்டுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
இம்மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன், மிகச்சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவல் ஏற்படுவது தடுக்கப்படும்.
மேலும், கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும்தொற்று உறுதி செய்யப்பட்டவர் கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல், பொது இடங்களுக்கு வரக்கூடாது. விதிமுறை களை மீறி தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பொது இடங்களுக்கு வந்தால், பொது மக்கள் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை (0424-1077, 0424-2260211) என்ற எண்களிலோ, 9791788852 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அவர் களை மீட்டு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.