

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை போலீஸார் கடவரஅள்ளி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள கோயில் அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட் டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, அவர்களை போலீஸார் பிடித்தனர். விசாரணையில் முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திம்மராஜ் (22), அரவிந்த் (20), உமாசங்கர் (21) என தெரிய வந்தது. இதையடுத்து மூன்று இளைஞர்களையும் போலீஸார் கைது செய்தனர்.