Published : 23 May 2021 05:52 AM
Last Updated : 23 May 2021 05:52 AM

கரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் ஆக்சிஜன் அளவு குறித்து பரிசோதிக்கப்படும் : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்

புதுக்கோட்டை

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கரோனா பரிசோதனை செய்வதுடன், ஆக்சிஜன் அளவு குறித்தும் பரிசோதிக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கரம்பக்காடு, குளமங்கலம் தெற்கு, ஆயிங்குடி, கொடிவயல், சுப்பிரமணியபுரம், நாகுடி ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பிறகு அவர் கூறியது:

சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 2 மருத்துவர்கள், 4 செவிலியர்கள் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

இங்கு, ஒரு 108 ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தப்படும். கரோனா தொற்று அதிகமுள்ள ஊராட்சிகளைக் கண்டறிந்து வீடு, வீடாகச் சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்போது, காய்ச்சல், ஆக்சிஜன் அளவு, இருமல், சளி போன்ற கரோனா அறிகுறிகள் குறித்தும் பரிசோதனை செய்யப்படும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வில், அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன், சுகாதார துணை இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x