

திருச்சி பெரியார் ஈவேரா கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் நிதியை நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பலரும் நிதி அளித்து வருகின்றனர். அந்தவகையில், திருச்சி பெரியார் ஈவேரா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் சங்க பொதுச் செயலாளர் செந்தில்ராஜன் தலைமையிலான குழுவினர் முன்னாள் மாணவர்களிடமிருந்து ரூ.1 லட்சம் நிதி திரட்டினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் திருச்சிக்கு வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை சங்கப் புரவலர் திருச்சி சிவா எம்.பி, நிர்வாகக் குழு உறுப்பினர் சுரேஷ்குமார் ஆகியோர் வழங்கினர்.