

அரியலூர் 275, கரூர் 315, நாகப்பட்டினம் 651, பெரம்பலூர் 219, புதுக்கோட்டை 406, தஞ்சாவூர் 884, திருவாரூர் 569, திருச்சி 1,351 என மத்திய மண்டலத்தில் மொத்தம் 4,685 பேருக்கு நேற்று புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களில் அரியலூர் 2, கரூர் 2, நாகப்பட்டினம் 3, பெரம்பலூர் 4, புதுக்கோட்டை 3, தஞ்சாவூர் 5, திருவாரூர் 3, திருச்சி 16 என 38 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெறப்பட்ட 801 பரிசோதனை முடிவுகளில் 203 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 10,844 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,574 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 134 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,987 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், சிகிச்சை பலனின்றி 4 பேர் நேற்று உயிரிழந்தனர்.