திருவண்ணாமலை அருகே - ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை சபாநாயகர் ஆய்வு :

தி.மலை அருகே நாயுடுமங்கலத்தில் நடந்த சிறப்பு முகாமில் மூதாட்டிக்கு கபசுர குடிநீர் வழங்கிய துணை சபாநாயகர் பிச்சாண்டி.  அருகில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எம்.பி., அண்ணாதுரை உள்ளிட்டோர்.
தி.மலை அருகே நாயுடுமங்கலத்தில் நடந்த சிறப்பு முகாமில் மூதாட்டிக்கு கபசுர குடிநீர் வழங்கிய துணை சபாநாயகர் பிச்சாண்டி. அருகில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி, எம்.பி., அண்ணாதுரை உள்ளிட்டோர்.
Updated on
1 min read

திருவண்ணாமலை அருகே ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை சபாநாயகர் பிச்சாண்டி நேற்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரத்தை அடுத்த ஆனந்தல், சொரகொளத்தூர், நார்த்தாம்பூண்டி கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் துணை சபாநாயகர் பிச்சாண்டி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தலா 500 வீதம் என மொத்தம் 1,500 முகக்கவசம் மற்றும் சானிடைசரை வழங்கினார். பின்னர் அவர், நாயுடுமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்று வரும் கரோனா பரிசோதனை, காய்ச்சல் மற்றும் தடுப்பூசி செலுத்தப்படும் சிறப்பு முகாமை ஆய்வு செய்தார். அப்போது அவர், மக்களுக்கு கப சுர குடிநீரை வழங்கினார்.

இதையடுத்து, நார்த்தாம் பூண்டி மற்றும் தேவனாம்பட்டு கிராமங்களில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்தார். மேலும், பூதமங்கலம் கிராமத்தில் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் திருத்தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் கான்கிரீட் தளம் அமைக்க ஆய்வு செய்தார். அப்போது, ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அண்ணாதுரை எம்பி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in