

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி, பாரூர், ஊத்தங்கரை, மத்தூர், போச்சம்பள்ளி, ஓசூர், சூளகிரி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது.
இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
திடீர் மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, பெனுகொண்டாபுரம் 20.20, பாரூர் 17.40, கிருஷ்ணகிரி 14.40, நெடுங்கல் 10.80, தேன்கனிக்கோட்டை 1.60, ஓசூர் 2.50, சூளகிரி 2, அஞ்செட்டி 4.60 மிமீ மழை பதிவாகி இருந்தது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மா, மலர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அரூர் பகுதியில் 42 மிமீ மழை
இதுதவிர, மாரண்ட அள்ளி பகுதியில் 26 மி.மீட்டர், பென்னாகரம் பகுதியில் 18 மி.மீட்டர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் 14.4 மி.மீட்டர், பாலக்கோடு பகுதியில் 12.6 மி.மீட்டர், ஒகேனக்கல் பகுதியில் 2 மி.மீட்டர், தருமபுரி பகுதியில் 01 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அரூர், மாரண்ட அள்ளி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழையின்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.