குழந்தை திருமணம் பள்ளி மாணவி மீட்பு :

குழந்தை திருமணம் பள்ளி மாணவி மீட்பு :
Updated on
1 min read

நீலகிரி மாவட்டம் உதகை அருகேவசிக்கும் பள்ளி மாணவிக்கும்,கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தரவிகுமார் (29) என்பவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்தனர்.அதன்பேரில், சம்பவ இடத்துக்கு குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி தேவகுமாரி, அலுவலர்கள் தவமணி, வசந்தா ஆகியோர் காவல்துறையினருடன் சென்று, மேற்குறிப்பிட்ட திருமணம் குறித்து விசாரணை நடத்தினர். அறிவுரை வழங்கி மாணவியை மீட்டு அவரதுபெற்றோரிடம் ஒப்படைத்தனர். ரவிகுமார் மீதும், திருமணம் நடத்தி வைத்தவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி தேவகுமாரி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in