

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இன்று (21-ம் தேதி) முதல் மூன்று நாட்களுக்கு கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை மூட ஈரோடு தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக சிஐஐ, ஈடிசியா, பேட்டியா மற்றும் கொங்காலம்மன் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரோட்டில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், மருத்துவ மனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பால் மற்றும் மிக அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவப்ப் பொருட்கள் தயாரிப்போர் தவிர மற்ற அனைவரும் இன்று (21-ம் தேதி) முதல் 23-ம் தேதி வரை தங்களின் கடை, நிறுவனங்களை தானாக முன்வந்து மூட வேண்டுகிறோம். நம்முடைய இந்த செயல்பாடு, சமூக பொறுப்பின் சிறந்த செயல்பாடாக இருக்கும்.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.