ரேஷன் கடைகளில் விநியோகிக்க - சேலம் வந்த 26,200 டன் அரிசி 18,010 டன் கோதுமை :

ரேஷன் கடைகளில் விநியோகிக்க -  சேலம் வந்த 26,200 டன் அரிசி 18,010 டன் கோதுமை :
Updated on
1 min read

கரோனா தொற்றுப் பரவல் காலத்தில், ரேஷன் கடைகள் மூலம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்க சேலம் மாவட்டத்துக்கு மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு 26 ஆயி ரத்து 200 டன் அரிசி மற்றும் 18 ஆயிரத்து 10 டன் கோதுமை வந்தது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், வேலை வாய்ப்பினை இழந்துவாடும் ஏழை குடும்பங்களுக்காக மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் சேலம் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசி மற்றும் கோதுமை மத்திய அரசின் இந்திய உணவு பாதுகாப்புக் கழகத்திடம் இருந்து சேலம் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு வந்தது.

இதுதொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறியதாவது:

சேலம் மாவட்டத்துக்கு பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கிட மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு தலா 905 டன் கோதுமை, 13 ஆயிரத்து 100 டன் அரிசி ஆகியவை வந்துள்ளன.

இவை, மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் இருந்து ஒதுக்கீடு கிடைத்தவுடன், அந்தந்த ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in