சிவகாசி அருகே ஊரடங்கை மீறி செயல்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு `சீல்' :

சிவகாசி அருகே ஆனையூரில் விதியை மீறி செயல்பட்டதால் `சீல்' வைக்கப்பட்ட பட்டாசு ஆலை.
சிவகாசி அருகே ஆனையூரில் விதியை மீறி செயல்பட்டதால் `சீல்' வைக்கப்பட்ட பட்டாசு ஆலை.
Updated on
1 min read

சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான ஆனையூர் ஊராட்சி தேன் காலனி பகுதியில் உள்ள நீராத்துலிங்கம் பயர் ஒர்க்ஸ், போடுரெட்டியாபட்டியில் உள்ள ரங்கா பயர் ஒர்க்ஸ் என்ற இரண்டு பட்டாசு ஆலைகளிலும் பட்டாசு தயாரிப்பு நடந்து வந்தது தெரிந்தது. மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை உரிமம் பெற்ற இந்த இரு பட்டாசு ஆலைகளையும் வருவாய்த் துறையினர் பூட்டி `சீல்' வைத்தனர். மாரனேரி போலீஸில் அளித்த புகாரின் பேரில் ஆலை உரிமையாளர் ரமேஷ் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in