

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 729 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 458 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந் துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் கரோனாவால், 25,714 பேர் பாதிக்கப்பட்டு, 18,541 பேர் குணமடைந்துள்ளனர். இதேபோல், கரோனாவால் பாதிக்கப்பட்ட 33, 38 வயதுடைய பெண்கள் உட்பட 5 பேர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் தருமபுரி மாவட்டத்தில் நேற்று 362 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 80 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். மாவட்டத்தில் தற்போது 2,607 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.