Published : 21 May 2021 03:13 AM
Last Updated : 21 May 2021 03:13 AM

கரோனா பரவல் காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பெண்கள், முதியோர் - இலவச சட்ட உதவி பெற வாட்ஸ்அப் மூலம் புகார் அனுப்பலாம் :

தஞ்சாவூர்

கரோனா பரவல் காரணமாக, இலவச சட்ட உதவி பெற நேரிடை யாக புகார் அளிப்பதை தவிர்த்து, வாட்ஸ் அப், மின்னஞ்சல் மூல மாக புகார்களை அனுப்பலாம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செய லாளரும், சார்பு நீதிபதியுமான ப.சுதா தெரிவித்துள்ளது: கரோனா பரவல் காரணமாக நேரடி சட்ட உதவி அளிக்க இயலாத நிலையில், பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர் அனைத்து விதமான இலவச சட்ட உதவி பெற, தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவை வாட்ஸ் அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு அலுவலகம் மற்றும் இம்மாவட்டத்தில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழு அலுவலகங்களில் நேரடியாக சட்ட ஆலோசனை வழங்க இயலாத நிலை உள்ளது. எனவே, பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக் களுக்கு அனைத்து விதமான சட்ட உதவிகள் வலைதளங்கள் மூலமாக அளிக்கப்படும்.

தஞ்சாவூர் சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மூலம் ஒவ்வொரு பகுதியிலும் உதவிக்கு அந்தந்த பகுதியில் உள்ள நிர்வாக உதவியாளர் மற்றும் சட்ட தன்னார்வ தொண்டர்கள் எண்ணுக்கு அழைத்து, சட்ட உதவி பெறலாம்.

தாங்கள் தரும் விண்ணப்பங்க ளில் மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் பெயர், வயது, விலாசம் மற்றும் செல்போன் எண்கள் தெளிவாக குறிப்பிடப்பட வேண் டும். இந்த மனுக்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு வழக்கறிஞர் மூலம் செல்போன் வழியாக விசாரித்து மனுக்கள் மீது தீர்ப்பு அளிக்கப்படும்.

மேலும், சட்ட உதவி ஆலோ சனை கேட்போர் அலுவலக நேரமான காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பணி நாட்களில் மட்டும் தொடர்பு கொள்ளலாம்.

தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக் குழுவுக்கு புகார் அளிக்க விரும்புவோர் 98949 47837 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அனுப்பலாம். மேலும், dlsathanjavur@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம். ஒரத்தநாடு வட்ட சட்டப்பணிகள் குழுவுக்கு 73738 10875, பட்டுக்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவுக்கு 89739 31928, கும்பகோணம் வட்ட சட்டப்பணிகள் குழுவுக்கு 97900 99498, திருவையாறு வட்ட சட்ட பணிகள் குழுவுக்கு 89409 43198, பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவுக்கு 99947 69209 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x