Published : 20 May 2021 03:12 AM
Last Updated : 20 May 2021 03:12 AM

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் - கூடுதலாக ஆக்சிஜனை சேமித்து வைக்க நடவடிக்கை :

உதகை

உதகை அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜனை சேமித்து வைக்கநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,அரசு மருத்துவமனையின் பொறுப்பாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 320 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 13,427-ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவுஉதகை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து உதகை அரசு தலைமை மருத்துவமனை பொறுப்பாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:உதகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. கூடுதலாக ஆக்சிஜனைசேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை ஆட்சியரிடம் பேசி உதகைக்கு கூடுதலாக 100 ஆக்சிஜன்சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டு இருப்புவைக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர்கள் காலியான பின்னர் அதனை நிரப்ப,கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில்நீலகிரிக்கு என முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உதகை அரசு மருத்துவ மனையில் யாரும் உயிரிழக்கவில்லை. கரோனா சிகிச்சைக்கு வருபவர்கள் தாமதமாகவருவதால், அவர்களைக் காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. கேரளா,கர்நாடகா மாநிலங்களை ஒட்டியுள்ள கூடலூர் பகுதியில் தொற்று பாதிப்புஅதிகரித்து வருகிறது. எனவே, காய்ச்சல்,சளி உள்ளிட்ட சாதாரண அறிகுறி தென்பட்டவுடன் உடனடியாக அருகில் உள்ளஆரம்ப சுகாதார நிலைய ம் அல்லது அரசுமருத்துவமனைகளில் மக்கள் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64-ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x