ஊரடங்கை மீறியதாக 175 பேர் மீது வழக்கு பதிவு :

ஊரடங்கை மீறியதாக 175 பேர் மீது வழக்கு பதிவு :
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவுவதை தடுக்க முக்கிய சாலைகளில் தடுப்புகள் வைத்து போலீஸார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். முழு ஊரடங்கை மீறி அவசியம் இல்லாமல் வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்த 137 நபர்களுக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.27,400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றதாக22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.11,000 அபராதம் விதிக்கப்பட்டது.

முழு ஊரடங்கை மதிக்காமல்தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றியதாக இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பெரிய வாகனங்கள் என 153வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ததோடு, ரூ.81,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in