

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் 81 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும், இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதனைத் தொடர்ந்து அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது.
இதேபோல் பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. 4 நாட்களுக்கு பிறகு அலுவலகம் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.