

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடப் பற்றாக்குறையால் வரந்தாவில் கரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றால் 11 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 650-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதுதவிர காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை அரசு மருத்துவமனைகள், சிவகங்கை பழைய மருத்துவமனை, பண்ணை பொறியியல் கல்லூரி, அமராவதிபுதூர் கரோனா மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் தினமும் 200-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுவதால் படுக்கைகளின் தேவை அதிகரித்து வருகிறது.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவைத் தவிர மற்ற வார்டுகள் பெரும்பாலும் கரோனா மற்றும் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோர் வார்டுகளாக மாற்றப்பட்டு விட்டன.
இதனால் தற்போது இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வார்டுகளுக்கான வரந்தாக்களில் ஆங்காங்கே கரோனா வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், ‘நாளுக்கு நாள் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதி கரித்து வருவதால் படுக்கை வசதி களை அதிகரித்து வருகிறோம்.
இடவசதி குறைவாக இருப் பதால், வராந்தாக்களிலும் அமைக்க வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது, என்றனர்.