ஸ்கேன் மையங்களில் கூடுதல் கட்டணம் : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எச்சரிக்கை :

ஸ்கேன் மையங்களில் கூடுதல் கட்டணம் : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் எச்சரிக்கை :
Updated on
1 min read

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: ஆம்புலன்ஸ் சேவைக்கும், தனியார் ஸ்கேன் மையங்களில் சிடி ஸ்கேன் எடுப்பதற்கும் அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஸ்கேன் மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கலாம்.

காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சில தினங்களில் 300 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா வார்டு திறக்கப்பட உள்ளது. இதில் 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்படும். அதேபோல் திருப்பத்தூரில் சித்தா பிரிவுடன் சேர்த்து 100 படுக்கை வசதிகள் தயாராகி வருகின்றன, என்று தெரிவித்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி, மாங்குடி எம்எல்ஏ, காரைக்குடி அரசு தலைமை மருத்துவர் தர்மர் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in