

காஞ்சிபுரம் அருகே ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி பகுதியைச் சேர்ந்தவர் சட்டநாதன்(42). இவர் அதே ஊர் ஏரிக்கரை பகுதியில் தனியாக சென்றபோது மர்ம கும்பல் ஒன்று இவரை வழிமடக்கி சரமாரியாக வெட்டியது. இதில் சட்டநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் மணல் மற்றும் ஏரி மண் போன்றவற்றை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்து வந்தாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் பாலுசெட்டி சத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.