

களக்காடு கோமதி அம்பாள்சமேத சத்தியவாகீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா,கரோனா பரவல் அச்சம் காரணமாக 2-வது ஆண்டாகரத்து செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலில் வைகாசிமாதம் 10 நாட்கள் நடைபெறும்திருவிழாவில் 9-ம் நாளில்நடராஜர் பச்சை சார்த்தி எழுந்தருளும் வைபவத்திலும், தேரோட்டத்திலும் சுற்றுவட்டார பகுதி மக்கள்திரளாக பங்கேற்பர். இவ்வாண்டுக்கான திருவிழா 16-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கி, 24-ம் தேதி தேரோட்டத்துக்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கரோனா கட்டுப்பாடுகளால், கோயில்களில் விழாக்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டுத் தலங்கள்மூடப்பட்டிருக்கின்றன. இக்கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தொடங்கவேண்டிய திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.